48எம்பி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இதன் விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்ட தகவல்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

ஆண்ட்ராய்டு 10
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

48எம்பி பிரைமரி கேமரா
கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பிமேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மே;லும் 25எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார் மற்றும் இன்ஃராரெட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த சசாதனம் வெளிவந்துள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி
கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5,ஜிபிஎஸ், க்ளோனாஸ்,சாம்சங் பே, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்;ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பிளாக், ப்ளூ, ரெட் மற்றும் ப்ரிஸம் வைட் போன்ற நிறங்களில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








