சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
சாம்சங் தனது கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 9 பை உடன் வெளியிடப்பட்டது .

இந்த புதுப்பிப்பு தற்போது ஆப்கானிஸ்தான், ஈராக், லாவோஸ், லிபியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, ரஷ்யா, தைவான், தாய்லாந்து,
வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் பரவி வருவதாக சாம்மொபைல் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு, இந்தியாவில் புதுப்பிப்பு கிடைப்பது தற்போது தெரியவில்லை.

கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1,560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்புஆண்ட்ராய்டு 9பை வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்

கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 25எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி ஏ30எஸ் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றில் உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்கது என்றுதான் கூறவேண்டும்.

கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 5.1ஏஎக்ஸ்,புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ்,என்எப்சி, யூ.எஸ்.பி 3.1 டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications