4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஏற்கனவே 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் கொண்டு கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்த கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1,560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிளை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் உடன் மாலி-ஜி71 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்
கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 25எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி ஏ30எஸ் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுää பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








