Home
Mobile

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்கள்.!

25எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி வரும் மார்ச்மாதம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை ஆன்லைனில் வெளயிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.

6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ50.!

மேலும் கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்களில் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே அமைப்பு இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, நீலம், சாம்பல் போன்ற நிறங்களில் கிடைக்கும், அதேபோன்று கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ50:

சாம்சங் கேலக்ஸி ஏ50:

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா ஸ்மார்ட்போன் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்படி 25எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி,இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், மற்றும் பல்வேறு இனைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேலக்ஸி ஏ30:

கேலக்ஸி ஏ30:

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேலக்ஸி ஏ30:

கேலக்ஸி ஏ30:

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி
செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி, கைரேகை சென்சார், இணைப்பு ஆதரவு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A30, Galaxy A50 announced with 6.4-inch Infinity-U display, 4,000mAh battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X