சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் மாடலை ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 5.3-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1,480 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு வசதி மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் சாதனத்தில் மைக்ரோ-யூ.எஸ்.பி சார்ஜிங், வைஃபை (2.4GHz), 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், எல்டிஇ மற்றும் புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.6,200-ஆகஉள்ளது.


Click it and Unblock the Notifications