அடேங்கப்பா.. இவ்வளவு விலையா? OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ27 (Samsung Galaxy A27) போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். அதுவும் இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தற்போது ஐரோப்பாவில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ27 போனின் விலை கசிந்துள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ27 போன் €349 (இந்திய மதிப்பில் ரூ.38,411) விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் €439 (இந்திய மதிப்பில் ரூ.48,297) விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A27 Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக 6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இருக்கும்.
அதுவும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையி அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது. 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ யுனிட் உள்ளிட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 5000mAh அல்லது 6000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சாம்சங் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போனை பிளாக், லைட் பிங்க், ப்ளூ, ஆவ்சம் ஒயிட் நிறங்களில் வாங்க முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications