நான் ரெடி தான் வரவா.. அவசரப்பட்டு பழைய Samsung 5ஜி போன் எதையும் வாங்கிடாதீங்க.. பட்ஜெட்டில் புது மாடல்!
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் ஏ-சீரீஸின் கீழ் உள்ள கேலக்ஸி ஏ37 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ57 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களின் விலைகளை தற்காலிகமாக குறைப்பதாக தகவல் வெளியான வேகத்தில்.. அதே ஏ-சீரீஸின் கீழ் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது சாம்சங் கேலக்ஸி ஏ27 (Samsung Galaxy A27) மாடல் ஆகும். சாம்சங் தனது பிரேசில் இணையதளத்தில் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போனை சாம்சங் வாலட்டுடன் இணக்கமான ஸ்மார்ட்போனாக பட்டியலிட்டு உள்ளது. இது கேலக்ஸி ஏ27 விரைவில் அறிமுகமாகக்கூடும் என்பதையும், அது தாமதமின்றி விரைவில் வர வாய்ப்புள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

வரவிருக்கும் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போன் ஆனது, கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 ஆகிய மாடல்களுக்கு பிறகு, இந்த சீரிஸில் அறிமுகமாகும் மூன்றாவது மாடலாக இருக்கும். மேலும் இது சாம்சங் கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போனிற்கு பிறகு வரும் மலிவு விலை மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரையி வெளியான லீக்ஸ் விவரங்களின் படி, கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 6.7-இன்ச் டிஸ்பிளேவை தக்க வைத்து கொள்ளும், ஆனால் கேலக்ஸி ஏ26 மாடலின் நாட்ச் டிசைனை விட மேம்பட்ட, ஒரு பஞ்ச்-ஹோல் கேமராவுடன் வரும் என்கின்றன.
கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி சென்சார், அதனுடன் 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப் இடம்பெறக்கூடும். இது இந்த வகை ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும் பொதுவான ஒன்றாகும். சுவாரஸ்யமாக, கேலக்ஸி ஏ27 ஆனது 12எம்பி முன்பக்க கேமராவை கொண்டிருக்கக்கூடும்.
இது கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போனில் உள்ள 13எம்பி சென்சாரை விட ஒரு தரக்குறைவாகத் தோன்றலாம். இருப்பினும், சாம்சங் ஒரு புதிய 12எம்பி சென்சாரை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது, இது பொதுவாக அதிக ஒளியை படம்பிடிக்க உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சிறந்த செல்பீக்களை எடுக்க முடியும்.
சிப்செட்டை பொறுத்தவரை - இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது - சாம்சங் அதிக சக்தியை விட சிறந்த செயல்திறன் மற்றும் மென்மையான அன்றாட பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.
இது 6ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நேர்த்தியான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற அனுபவத்தை வழங்கக்கூடும், குறிப்பாக தங்கள் ஸ்மார்ட்போன்களை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, இது நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்!
விலையைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போன் ஆனது அதன் முந்தைய மாடலை விட அதிக விலையில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், சாம்சங் கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ரூ.24,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வரவிருக்கும் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 க்கும் குறைவாக தொடங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 விலை குறைப்பு: டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஏ37, ஏ57 மாடல்களுக்கான தள்ளுபடி பட்டியலை பகிர்ந்துள்ளார். இந்த சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும், மே 27 ஆம் தேதி வரை மட்டுமே நீடிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
அதன்படி கேலக்ஸி ஏ37 5ஜி பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.5,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.36,999 க்கும், சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,000 தள்ளுபடிக்கு பின்னர் ரூ.49,999 க்கும் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications