வேற லெவல் டிசைன்.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கேலக்ஸி ஏ27 போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் இந்த போனில் உள்ளது. பிளாக், ப்ளூ, லைட் பிங்க் நிறங்களில் இந்த கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A27 5G Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக 6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இருக்கும்.
அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையி அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது. 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு கிடைக்கும்.
50எம்பி பிரைமரி + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ யுனிட் உள்ளிட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000mAh அல்லது 6000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Photo Credit: MyMobiles/ @OnLeaks


Click it and Unblock the Notifications