Samsung வெச்சான் பாரு.. ரூ.3,000 ஆஃபருடன் OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி (Samsung Galaxy A27 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. ஏ சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் பேட்டரி மற்றும் கேமரா சிஸ்டம் கொடுத்துள்ளது. இருப்பினும், பிரீமியம் மாடல்களில் கிடைக்க கேலக்ஸி ஏஐ பீச்சர்களை கொடுக்கிறது.
மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. ரூ.3,000 ஆஃபர் விலை போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஏஐ அசிஸ்டன்ட் இன்டிகிரேஷன் (AI Assistant Integration), வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் (Voice Transcription), ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser) கொடுக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A27 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ சூப்பர் அமோலெட் (Infinity-O Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 8.5 (Samsung One UI 8.5) கொடுக்கப்பட்டு உள்ளது.
மிட்-ரேஞ்ச் விலைக்கு கிடைக்கும் சாம்சங் மாடல்களில் கொடுக்கப்படும்படி 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. அதேபோல 50 எம்பி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எப்/1.8 அபெர்சர் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 7.8 எம்எம் தடிமன் மற்றும் 200 கிராம் எடையை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP64 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ, வை-பை 801.11 ஏசி, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி கொடுக்கப்பட்டு உள்ளது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,999ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,499ஆக இருக்கிறது. ஜூலை 3ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.3,000 பேங்க் தள்ளுபடி போக கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications