Home
Mobile

Samsung அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 2032 வரை ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் செக் குடியரசில் (Czech Republic) புதிய சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி அம்சங்கள்: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (FHD+ Super AMOLED display) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 800 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

Samsung அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எநத் மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Snapdragon 6 Gen 3 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

One UI 8.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். அதாவது வரும் 2032 வரை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கு வழங்கப்படும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Gorilla Glass Victus plus), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

Samsung அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எநத் மாடல்?

டூயல் சிம் 5ஜி சப்போர்ட், வைஃபை ஏசி, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 200 கிராம் ஆகும். பிளாக், லைட் பிங்க், ப்ளூ, லைட் கிரீன் ஆகிய கலர்களில் இந்த புதிய சாம்சங் போனை வாங்க முடியும்.

5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இந்த போனின் விலை வெளியாகும் அப்போது அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A27 5G With 50MP Camera launched in Czech Republic : check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X