எனக்கு END-ஏ கிடையாது டா.. 5ஜி, 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. பக்கா பட்ஜெட்டில் புது Samsung போன்!
சீனாவில் அதன் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேகத்தில்.. சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக கேலக்ஸி ஏ27 (Galaxy A27) மாடல் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது
சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிஐஎஸ் சான்றிதழ் இணையதளத்தில் (BIS certification website) காணப்பட்டுள்ளதாக 91மொபைல்ஸ்-ன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. பிஐஎஸ் என்கிற இந்திய தர நிர்ணய கழகத்தின் (Bureau of Indian Standards) சான்றிதழ் என்பது, ஒரு தயாரிப்பு பாதுகாப்பானது, சோதிக்கப்பட்டது மற்றும் இந்தியாவில் சட்டப்பூர்வமாக விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

சாம்சங் பிரேசில் இணையதளத்தில் தோன்றிய சில நாட்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் லிஸ்டிங்கிற்கும் வந்துள்ளது. ஆக சாம்சங் நிறுவனம் பிரேசிலுடன் சேர்த்து இந்தியாவிலும் இந்த போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது போல் தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரை லீக் ஆன விவரங்களின்படி, கேலக்ஸி ஏ27 ஒரு பெரிய 6.7-இன்ச் டிஸ்பிளேவை தக்கவைத்து கொண்டு, கேலக்ஸி ஏ26 மாடலில் உள்ள நாட்ச் டிசைன் நீக்கப்பட்டு பன்ச்-ஹோல் கட்அவுட்டிற்கு மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனில்தான் மிகவும் சுவாரஸ்யமான மேம்பாடு இருக்கலாம். இந்த போன் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட், 6ஜிபி ரேம் ஆகியவற்றை கொண்டு இயங்கக்கூடும், மேலும் இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் வரலாம். ஆக கேலக்ஸி ஏ27 ஸ்மார்ட்போன் ஆனது பல ஆண்டுகளாக சீரான, நம்பகமான அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பபடும் ஒரு ஸ்மார்ட்போனாக தெரிகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் ஆகிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் சாம்சங் நிறுவனம் ஏ26 மாடலில் இருந்த 13எம்பி சென்சாரிலிருந்து 12எம்பி சென்சாருக்கு மாறுவதாக தெரிகிறது. இந்த புதிய சென்சார் பெரியதாக இருக்குமென்று கூறப்படுகிறது, இது நடைமுறையில் குறைந்த ஒளியில் சிறந்த செல்பீ செயல்திறனை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
பேட்டரி குறித்த விவரங்கள் இல்லை. பெரும்பாலும் இது 5000mAh பேட்டரி அல்லது அதை சுற்றிய எம்ஏஎச் திறனை எதிர்பார்க்கலாம். விலையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 - ரூ.29,999 க்குள் என்க்ரியா விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்களில் - முன்னணியில் இருக்கும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, சாம்சங் கேலக்ஸி ஏ27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மெருகூட்டப்பட்ட சாஃப்ட்வேர், ஒரு செம்மையான இன்டர்பேஸ் மற்றும் நம்பகமான அப்டேட் ஆகியவைகளை முக்கிய பலங்களாக கொண்டிருக்கும்.
சீனாவில் விற்பனையை நிறுத்திய சாம்சங்: இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர தயாரிப்புகள் மீதான சலுகைகள் அறிவிக்கப்படும் மறுகையில் சாம்சங்நிறுவனமானது சீனாவில் அதன் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏன்? சீன சந்தையில் நுகர்வோர் மின்னணு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர் சீன பிராண்டுகளின் அதிகரித்து வரும் அழுத்தத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு: "வேகமாக மாறிவரும் சந்தை நிலவரங்கள்" காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ சீன இணையதளம் தற்போது இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தும் அறிவிப்பை காட்டுகிறது.
இருப்பினும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையும் வாடிக்கையாளர் ஆதரவும் வழக்கம் போல் தொடரும் என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் டிவிகள், மானிட்டர்கள், பிரிஜ்கள், வாஷிங் மெஷின்கள், ட்ரையர்கள், ஏசிக்கள், வேக்வம் கிளீனர்ள் மற்றும் ஏர் பியூரிஃபையர்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் உள்ளூர் விற்பனையை சீனாவில் சாம்சங் நிறுத்தவுள்ளது. ஆனால் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தொடர்ந்து வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications