Home
Mobile

வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. புது Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

அயர்லாந்து, லத்தீன், UK மற்றும் அமெரிக்காவில் உள்ள சாம்சங்கின் வலைத்தளங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ26 (Samsung Galaxy A26) ஸ்மார்ட்போன் நேரலையில் காணப்பட்டுள்ளன. எனவே இந்த நாடுகளில் விரைவில் கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியாவின் BIS தளத்தில் கூட இந்த கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போன் காணப்பட்டது. ஆனால் இந்தியாவில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. சரி இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்.. புது Samsung 5ஜி போன் ரெடி..

சாம்சங் கேலக்ஸி ஏ26 அம்சங்கள் (Samsung Galaxy A26 Specifications): எக்ஸிநோஸ் 2400இ (Exynos 2400e SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ26 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும் தகவல் வெளியாகி உள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ26 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 15 இயங்குதள (Android 15 OS) வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வசதி இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. டூயல் சிம், 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி போனில் உள்ளன.

மேலும் 4565mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ26 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A26 now support pages are live: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X