Home
Mobile

யாருமே எதிர்பார்க்கல.. 6ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?

சாம்சங் நிறுவனம் தனது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி (Samsung Galaxy A26 5G) வேரியண்டை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியான நிலையில், தற்போது புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது அறிமுகம் செய்யப்பட்ட 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி மாடலை ரூ.23,499 விலையில் வாங்க முடியும். பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.24,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.27,999 விலையிலும் வாங்க முடியும். அதேபோல் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேரியண்ட் சாம்சங் இணையதளம் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

யாருமே எதிர்பார்க்கல.. புதிய Samsung  5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A26 5G specifications): ஆக்டோ கோர் எக்ஸிநோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-யு டிஸ்பிளே (Super AMOLED Infinity-u Display)உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தற்போது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ26 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக Samsung One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 OS அப்டேட் மற்றும் வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. அதேபோல் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் போனில் உள்ளன. குறிப்பாக ஆவ்சம் பீச் (Awesome Peach), ஆவ்சம் மின்ட் (Awesome Mint), ஆவ்சம் பிளாக் (Awesome Black) மற்றும் ஆவ்சம் ஒயிட் (Awesome White) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A26 5G 6GB RAM Variant Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X