அடிச்சு புடிச்சி வாங்கலாம்.. 50எம்பி கேமரா.. 8ஜிபி ரேம்.. 6.44-இன்ச் டிஸ்பிளே.. கம்மி விலையில் Samsung போன்..
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ25 எனும் ஸ்மார்ட்போனை மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கேலக்ஸி ஏ25 போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன.
அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ25 (Samsung Galaxy A25) ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 ( octa-core Exynos 1280) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். அதேபோல் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேலக்ஸி ஏ25 போனின் மாடல் நம்பர் SM-A256B என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி ரியர் கேமராவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 5000 எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 6.44-இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும்.மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும். எலக்ட்ரிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களில் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5ஜி (டூயல்-சிம்), என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications