Home
Mobile

ஆல் ஏரியாவிலும் கில்லி.. 50எம்பி கேமரா, AMOLED டிஸ்பிளே.. கம்மி விலை.. புது சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது கீக்பெஞ்ச் தளத்தில் இந்த போனின் சில முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீக்பெஞ்ச் தளத்தில் வெளியான தகவலின்படி இந்த கேலக்ஸி ஏ25 (Samsung Galaxy A25) ஸ்மார்ட்போன் ஆனது SM-A256B என்று மாடல் நம்பரைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஆல் ஏரியாவிலும் கில்லி.. AMOLED டிஸ்பிளே.புது சாம்சங் 5ஜி போன்....

6.44-இன்ச் அமோலெட்(AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மாரட்போனின் டிஸ்பிளே. குறிப்பாக சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் இந்த போனின் டிஸ்பிளே.

சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

5எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ultra-wide camera) + 2எம்பி மேக்ரோ கேமரா ( macro camera) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

One UI 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட் (Security updates) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆல் ஏரியாவிலும் கில்லி.. AMOLED டிஸ்பிளே.புது சாம்சங் 5ஜி போன்....

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என்கிற இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 போன் வெளிவரும்.
அதேபோல் குறைந்த எடையைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 with Android 14, 5000mAh battery will launch soon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X