Home
Mobile

பட்ஜெட் விலை.. 50எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா.. வருகிறது புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ25 எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் கேமரா அம்சங்களைப் பார்ப்போம்.

50எம்பி ரியர் கேமரா, வருகிறது புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ25 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ25 போனின் மாடல் எண் SM-A256E என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 போனின் கேமரா அம்சங்கள் மட்டுமே தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி அம்சங்கள்: 6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன்.120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனுக்கு நான்கு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன். இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

50எம்பி ரியர் கேமரா, வருகிறது புதிய சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது. குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி (டூயல்-சிம்), என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த கேலக்ஸி எப்34 5ஜி போனில் உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 camera specifications leaked online: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X