Home
Mobile

பட்ஜெட் பிரீமியம்.. 50எம்பி கேமரா.. 6.44-இன்ச் டிஸ்பிளே.. மிரட்டலான சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சியோமி, விவோ, மோட்டோ போன்களை விட சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது FCC சான்றிதழ் தளத்தில் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் மாடல் எண் SM-A256U என்று கூறப்பட்டுள்ளது.

6.44-இன்ச் டிஸ்பிளே.. மிரட்டலான சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

எனவே இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த எக்ஸ்நோஸ் 1280 ( Exynos 1280) சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸமார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். மேலும் ப்ளூ, கிரே, க்ரீன் உள்ளிட்ட நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் டெப்த் சென்சார் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

6.44-இன்ச் டிஸ்பிளே.. மிரட்டலான சாம்சங் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 5G spotted at FCC: check specifications and More Details: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X