பட்ஜெட் விலை.. 6.44-இன்ச் டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது படஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தற்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகாப் பார்ப்போம். அதாவது வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் கொண்ட டிஸ்பிளேவுடன் இந்த கேலக்ஸி ஏ25 5ஜ மாடல் அறிமுகமாகும். பின்பு இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

அதேபோல் எக்ஸ்நோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனில் உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸமார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். . மேலும் இந்த போனின் எடை 197 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ப்ளூ, கிரே, க்ரீன் உள்ளிட்ட நிறங்களில் இந்த சாம்சங் போன் அறிமுகமாகும்.
6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. மேலும் இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
6ஜிபி ரேம் + 12ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.13,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது ரெட்மி நிறுவனம் தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே ரெட்மி நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








