Home
Mobile

பட்டைய கிளப்ப போகும் புதிய சாம்சங் 5ஜி போன்.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனை வரும் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட் போன் ஆனது எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்டைய கிளப்ப போகும் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

சக்திவாய்ந்த எக்ஸ்நோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனில் உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸமார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மேலும் ப்ளூ, கிரே, க்ரீன் உள்ளிட்ட நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பட்டைய கிளப்ப போகும் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 197 கிராம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரூ.15,000-க்குள் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 5G Official Renders and Specifications Released: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X