வாங்குனா இந்த சாம்சங் போனை வாங்கணும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் 2024 ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G Specifications): தரமான எக்ஸ்நோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
One UI 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸமார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ப்ளூ, கிரே, க்ரீன் உள்ளிட்ட நிறங்களில் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








