Home
Mobile

அடிச்சு தூக்கும் பட்ஜெட்.. OIS கேமரா.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. UHD ரெக்கார்டிங்.. எந்த போன்?

சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக ரூ.24,000 பட்ஜெட்டில் ஓஐஎஸ் கேமரா, 1டிபி மெமரி சப்போர்ட், சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A25 5G Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் (Octa Core Exynos 1280 5nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஒன் யுஐ 6.0 (One UI 6.0) சப்போர்ட் வருகிறது.

அடிச்சு தூக்கும் பட்ஜெட்.. OIS கேமரா.. 1TB மெமரி.. UHD ரெக்கார்டிங்!

இந்த ஏ25 5ஜி மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.5 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.

இதுவொரு சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பெசல் (Bezel) டிசைன் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் போனில் ஓஐஎஸ் (OIS) கேமரா சிஸ்டம் வருகிறது.

ஆகவே, 50 எம்பி ஆட்டோபோகஸ் (Autofocus) மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு ஃபிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவில் அல்ட்ரா எச்டி (UHD) 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் மற்றும் 500Hz மோஷன் சாம்பிளிங் ரேட் (Motion Sampling Rate) வருகிறது.

அதேபோல 13 எம்பி அல்ட்ரா கிளியர் செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் ஏ25 5ஜி போனில் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Super Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் இடம்பெற்றுள்ளது.

இந்த போனில் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. 197 கிராம் எடை கொண்டிருக்கிறது. யுஎஸ்பி 2.0 (USB 2.0), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

அடிச்சு தூக்கும் பட்ஜெட்.. OIS கேமரா.. 1TB மெமரி.. UHD ரெக்கார்டிங்!

இந்த போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor) மற்றும் ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor) வருகிறது. இந்த மாடலில் பேண்டஸி ப்ளூ (Fantasy Blue), ஆப்டிமிஸ்டிக் ப்ளூ (Optimistic Blue), பர்சனாலிட்டி யெல்லோ (Personality Yello) மற்றும் பேன் லின் பிளாக் (Ban Linh Black) ஆகிய 4 கலர்கள் இருக்கின்றன.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,000ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் கம்மியான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. ஒருசில வாரங்களில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 5G Launched With Exynos 1280 Chip, 8GB RAM Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X