Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் சிப்செட், பெரிய டிஸ்பிள உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A25 5G Specifications): 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போன். மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதிருது இந்திய மார்க்கெட்.. சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

தரமான எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஒன் யுஐ 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (One UI 6 based on Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் எடுக்க முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியணட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இதில் உள்ளது.

அதிருது இந்திய மார்க்கெட்.. சாம்சங் 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் நீலம், கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி விலை: 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. இந்த போனின் விற்பனை விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் விற்பனை விவரங்கள் வெளியானதும் உடனே அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 5G launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X