இந்த 5G போனின் ஆர்டர் தூள் பறக்க போகுது.. குறையே சொல்ல முடியாது.. பட்ஜெட் விலையில் புது Samsung மாடல்!
12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி மெயின் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை.. மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் விலையில் வழங்கும் ஒரு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட தயார் நிலையில் உள்ளது. அதென்ன மாடல்? இதோ விவரங்கள்:
அதென்ன மாடல்? நாம் இங்கே பேசுவது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான், சாம்சங்கின் இந்த புதிய மிட்-ரேன்ஜ் மாடலானது கூடிய விரைவில் இந்தியா உட்பட, உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாகவே, சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் சப்போர்ட் பேஜ் (Support Page) ஆனது சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் லைவ் ஆகியுள்ளது. முன்னதாக, இதே ஸ்மார்ட்போன் பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்டுடம் இந்திய தரச்சான்றிதழ் பணியகத்தின் (Bureau of Indian Standards) இணையதளத்திலும் காணப்பட்டது.
என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? பிஐஎஸ் வலைத்தளம் வழியாக சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி மெயின் சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

மெயின் சென்சார் உடன் 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவைகளும் இடம்பெறும். முன்பக்க கேமராவை பொறுத்தவரை, இதில் 13எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உடன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் சொந்த எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 Chipset) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி டிபார்ட்மென்ட்டை பொறுத்தவரை, இது யூஎஸ்பி-சி போர்ட் மூலம் 25வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுருக்கும்.

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். அவைகள் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆகும்.
என்ன விலைக்கு வரும்? முன்னரே குறிப்பிட்டப்படி சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மலிவு விலையில் கிடைக்கும் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்திய சந்தையில் இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும்; இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்44 (Samsung Galaxy M44) மாடலும் கூட விரைவில் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. இது கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்34 (Samsung Galaxy M34) மாடலின் ""மேம்படுத்தப்பட்ட" வாரிசாக இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் 5,000mAh பேட்டரி போன்றவைகளுடன் வரலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்44 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் பேக் செய்யப்படலாம். அதில் 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இடம்பெறலாம். முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்லாட்டில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








