வரிசைக்கட்டி வாங்கும் இந்தியர்கள்.. ஆஃபர் விலையில் விற்பனையை ஆரம்பித்த 2 புதிய Samsung 5G போன்கள்!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி ஏ25 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ15 5ஜி மாடல்கள், கடந்த 2023 டிசம்பர் 26 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகின. தற்போது இவ்விரு சாம்சங் ஸ்மார்ட்போன்களும் ஆஃபர் விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) மற்றும் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.26,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.29,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ப்ளூ, யெல்லோ மற்றும் ப்ளூ பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் போது நீங்கள் எஸ்பிஐ பேங்க் கார்ட்டை பயன்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.3,000 கேஷ்பேக் (Cashback) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனும் கூட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,499 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ப்ளூ, லைட் ப்ளூ மற்றும் ப்ளூ பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் போது நீங்கள் எஸ்பிஐ பேங்க் கார்ட்டை பயன்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சாம்சங் ஸ்மார்ட்போன்களும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள சாம்சங் இந்தியா இ-ஸ்டோர் (Samsung India e-store) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளின் (Authorized offline retail stores) வழியாக வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே, 8ஜிபி வரையிலான ரேம், ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 சிப்செட், 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி + 8எம்பி + 2எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி.
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், அதிகபட்சம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், 90ஹெர்ட்ஸ் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வருகிற ஜனவரி 17 ஆம் தேதியன்று சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸிக்ளப் வழியாக வெளியான லீக்ஸ் தகவல்களின்படி, கேலக்ஸி எஸ்24 இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.82,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.1,05,000 க்கும், கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா மாடலானது சுமார் ரூ.1,33,500 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








