Home
Mobile

அதிரும் மார்க்கெட்.. 5000எம்ஏஎச் பேட்டரி.. 25W சார்ஜிங்.. 256GB மெமரி .. வருகிறது சாம்சங் 5ஜி போன்..

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் EB-BA256ABS ஆகும். பின்பு இந்த போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் அட்டகாசமான வடிவமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரும் மார்க்கெட்.. 256GB மெமரி .. வருகிறது சாம்சங் 5ஜி போன்..

குறிப்பாக 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனில் எக்ஸ்நோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தரமான வடிவமைப்பு மற்றும் அருமையான மென்பொருள் வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸமார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். . மேலும் இந்த போனின் எடை 197 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ப்ளூ, கிரே, க்ரீன் உள்ளிட்ட நிறங்களில் இந்த சாம்சங் போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதிரும் மார்க்கெட்.. 256GB மெமரி .. வருகிறது சாம்சங் 5ஜி போன்..

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A25 5G battery details revealed: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X