புத்தம் புதிய Samsung போன் வரப்போகுது! சியோமி, விவோ எல்லாம் ஓரமா போங்க.!
சியோமி, விவோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். அதன்படி இந்நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், நீண்ட நேரம் பேக்கப் வழங்கும் பேட்டரி, அட்டகாசமான கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி Super AMOLED Infinity-V டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.குறிப்பாக இதன் மென்பொருள் வசதி தனி கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த புதிய போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான
கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன்.
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக தான் உள்ளது. ஆனால் இந்த போனின் 5ஜி வசதி கிடையாது.
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் இந்த டால்பி Atmos ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன்
பட்ஜெட் விலையில் தான் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களையும்
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications