சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு: உடனே முந்துங்கள்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் சில போன்களுக்கு விலைகுறைப்பும் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு அட்டகாசமான கேலக்ஸி போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ23 விலைகுறைப்பு
அதாவது தற்போது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனுக்கு தான் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,499-ஆக இருந்தது. தற்போது விலைகுறைக்கப்பட்டு இது ரூ.18,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது
விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ23 நிறங்கள்
குறிப்பாக ஆரஞ்சு, கருப்பு, நீல நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூப்பரான டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

தரமான சிப்செட்
சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான கேமராக்கள்
சாம்சங் கேலக்ஸி எ23 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ23 பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நேற்று சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13, Galaxy M13 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.
குறிப்பாக தரமான சிப்செட் மற்றும் அருமையான கேமரா வசதியுடன் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
அதேபோல் கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 போன்கள் ஆட்டோ டேட்டா ஸ்விட்ச்சிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த தொழில்நுட்பம் கணடிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும்.

அமேசான் தளத்தில் விற்பனை
சாம்சங் கேலக்ஸி எம்13 4ஜி மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன்கள் வரும் ஜூலை 23-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன்களை தேர்வு செய்யப்பட்ட வங்கி காரடுகள் மற்றும் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications