கசகசனு இல்லாம ஒரே கேமரா தான்: சின்னதா க்யூட்டா அறிமுகமான Samsung 5G ஸ்மார்ட்போன்!

|

Samsung Galaxy A23 5G ஆனது 5.8 இன்ச் எச்டி+ டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை ரியர் கேமரா அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. ரூ.7000 விலைப்பிரிவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் கூட 6 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Samsung Galaxy A23 5G

Samsung Galaxy A23 5G

Samsung Galaxy A23 5G ஸ்மார்ட்போனானது தற்போது ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தையில் கேலக்ஸி ஏ23 என வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு இருந்தது தற்போது வெளியாகியுள்ள ஸ்மார்ட்போனில் ஒற்றை 50 எம்பி கேமரா இருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

புதிய சாம்சங் Galaxy A23 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி இன் புதிய மாறுபாட்டில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை ரேம் விருப்பத்தில் அறிமுகமாகி உள்ளது.

Samsung Galaxy A23 5G விலை

Samsung Galaxy A23 5G விலை

Samsung Galaxy A23 5G விலை குறித்து பார்க்கையில், இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் என ஒற்றை விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விலையானது ஜப்பானில் JPY 31,680 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.18,200 ஆகும்.

சர்வதேச வெளியீடு தேதி

சர்வதேச வெளியீடு தேதி

Samsung Galaxy A23 5G ஸ்மார்ட்போனானது au.com, J:Com, Rakuten Mobile மற்றும் ஜப்பானில் உள்ள பிற சில்லறை விற்பனையாளர்களின் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ரெட் மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய Samsung Galaxy A23 5G இன் சர்வதேச வெளியீடு குறித்த தகவல் எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Samsung Galaxy A23 5G சிறப்பம்சங்கள்

Samsung Galaxy A23 5G சிறப்பம்சங்கள்

Samsung Galaxy A23 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது. இதில் 5.8 இன்ச் எச்டி+ (720x1,560 pixels) TFT டிஸ்ப்ளே உடன் வெளியாகி இருக்கிறது. 16 மில்லியன் வண்ண ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிஸ்ப்ளே. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய பதிப்பு உலகளவில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 6.6 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் உடனான ஆக்டோ கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது.

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

கேலக்ஸி ஏ23 5ஜி இன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் ஒற்றை 50 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக வெளியான ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. அதாவது இதில் 50 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் டூயல் 2 எம்பி சென்சார்க்ள என நான்கு கேமராக்கள் இருக்கிறது.

IP68 மதிப்பீடு ஆதரவு

IP68 மதிப்பீடு ஆதரவு

புதிய Galaxy A23 5G ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இதில் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் இருக்கிறது. டஸ்ட் மற்றும் நீர் எதிர்ப்புக்கு என IP68 மதிப்பீடு ஆதரவு இருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களுக்கு என 5G, 4G/LTE, Bluetooth v5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகள் இருக்கிறது. சாம்சங் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இல் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. சார்ஜிங் வேகம் குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A23 5G Launched with Single 50MP Rear Camea, 5.8 inch Display and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X