சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ22எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்த சாதனம்
அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக கேலக்ஸி ஏ22எஸ் மாடல் ஆனது மீடியாடெக் சிப்செட், மூன்று ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களில் அறிமுகமானது இந்த கேலக்ஸி ஏ22எஸ். ஆனால் இந்த புதிய கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். மேலும் இப்போது கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடடெக் Dimensity 700 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு One UI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தபுதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர கேமரா அம்சங்கள், எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன்.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஏ13 5ஜி
அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றிய சற்று வரிவாகப் பார்ப்போம். அதன்படி இந்த சாதனம் 50எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக கேலக்ஸி ஏ13 5ஜி இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஆதரவு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இதுதவிர கேமிங் வசதிக்கு என்றே தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும்
இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள என்று தான் கூறவேண்டும்


Click it and Unblock the Notifications