Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் கேலக்ஸி ஏ22 மாடலின் 4ஜி வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே

6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ22 மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்
1600x720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்

இந்த புதிய கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி உடன் ARM மாலி-G52 2EEMC2 GPU ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 கோர் இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சங் கேலக்ஸி ஏ22 சாதனத்தின் பின்புறம்

சாம்சங் கேலக்ஸி ஏ22 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் 15

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் பே, டூயல் 4ஜி வோல்ட்இ,

சாம்சங் பே, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனம் பிளாக் மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 18,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A22 With Quad Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X