மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக மகுடம் சூட ரெடி ஆகும் புதிய Samsung Galaxy A22 5G..

|

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி ஏ 42 5 ஜி (Samsung Galaxy A22 5G) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது, இது நிறுவனத்தின் மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாக அந்நேரத்தில் முடிசூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது இந்த மகுடம் சமீபத்தில் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி A22 5G போனால் பறிக்கப்பட்டுள்ளது.

மலிவான விலை இது தானா?

மலிவான விலை இது தானா?

தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி யை இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தலாம், இது சாம்சங்கிலிருந்து இன்றுவரை கிடைக்கக்கூடிய மலிவான 5 ஜி ஸ்மார்ட்போன்களை விட மிகவும் குறைந்த விலையானரூ. 13, 400 என்ற விலையில்அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் வதந்திகளின் படி, சாதனம் 2021 இன் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி

கேலக்ஸி கிளப் சாதனம் குறித்த தனது அறிக்கையில் பகிரப்பட்ட சில தகவல்களைப் பாருங்கள். சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் இங்கே, சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு ஸ்டோரேஜ் கட்டமைப்புகளில் வரும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. வயலட், வெளிர் பச்சை, வெள்ளை மற்றும் சாம்பல் ஆகிய வண்ண விருப்பங்களில் இது கிடைக்கக்கூடியது.

மலிவு விலையில் ரெடி ஆகும் 'ஜியோபுக்' லேப்டாப்.. அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் இது தானா?மலிவு விலையில் ரெடி ஆகும் 'ஜியோபுக்' லேப்டாப்.. அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் இது தானா?

சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை

சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை

சாம்சங் இந்த சாதனத்தை ஐரோப்பா மற்றும் ஆசியா சந்தைகளில் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனத்தின் வேறு தகவல்கள் தற்போது கிடைக்கவில்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் சாதனம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்னும் பல தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

5 ஜி  இல் இன்னும் முன்னேற்றம் அடையாத இந்தியா

5 ஜி இல் இன்னும் முன்னேற்றம் அடையாத இந்தியா

சாம்சங் தனது 4 ஜி வேரியண்ட்டை மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், அதன் 5 ஜி வேரியண்ட்டை இங்குக் கொண்டு வருவது குறித்து நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் அறிகுறியும் இல்லை. சாம்சங் கேலக்ஸி ஏ 22 5 ஜி விஷயத்திலும் அப்படி இருக்கலாம், ஏனெனில் இந்தியாவின் 5 ஜி சந்தை இன்னும் முன்னேற்றம் அடையாததால் வணிக ரீதியான 5 ஜி ரோல்அவுட் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A22 Might be the Most cheapest Price 5G smartphone In 2021 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X