Home
Mobile

நீங்கள் எதிர்பார்க்கும் விலையில் நாளை அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்.!

செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அதன்படி சாம்சங் நிறுவனமும் நாளை (ஜூலை 23) அதிநவீன கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. குறிப்பாக
இந்த சாதனம் நீங்கள் நினைக்கு பட்ஜெட் விலையில் வெளிவரும்.

வெளியிட்ட தகவலின்படி

gadgetsnow வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,999-விலையிலும், இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் ரூ.21,999-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இப்போது ஆன்னிலைன் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி சாதனத்தின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் வசதி

குறிப்பாக கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனினல் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

 48எம்பி பிரைமரி சென்சார்

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/

கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

 ஸ்மார்ட்போனில்

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 ப்ளூடூத், ஜி.பி.எஸ்

5 ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புத்தம் புதிய கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A22 5G with 48 Mega Pixel Camera Launching in India on July 23 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X