Just In
- 6 hrs ago
Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!
- 9 hrs ago
பேய் மாதிரி வேலை செஞ்சிருக்கும் Samsung: இதோ Galaxy Z Fold 4-இன் Quick Review!
- 9 hrs ago
ரூ.25,000-க்குள் கிடைக்கும் பெஸ்ட் டேப்லெட் மாடல்கள்: இதோ பட்டியல்.!
- 9 hrs ago
இந்தியாவில் தடை செய்யப்பட்ட VLC Media Player: ஹேக்கிங் குழு லீலை- சைபர் தாக்குதல் காரணமா?
Don't Miss
- News
தேசியக்கொடியை அவமதித்த கும்பல் தான் அதை ஏற்ற சொல்கிறது.. பாஜகவை கடுமையாக விமர்சித்த டிஆர்பி ராஜா
- Sports
ஆசிய கோப்பை 2022 - 17 புலிக்குட்டிகளை களமிறக்கும் வங்கதேசம்.. 5 ஆண்டுக்கு பிறகு கேப்டனாகும் ஷகிபுல்
- Movies
நைட் ஷோவெல்லாம் அதிகரிக்குது.. விரட்டி விரட்டி வசூலிக்கும் விருமன்.. விநியோகஸ்தர்கள் ஹேப்பி!
- Lifestyle
இந்த உணவுகள மட்டும் நீங்க சாப்பிட்டா... சும்மா ஹீரோயின் மாதிரி மின்னுவீங்களாமாம்!
- Automobiles
சூர்யகுமார் யாதவ் உண்மையில் வாங்கியிருக்கும் கார் இதுதான்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்!
- Finance
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்... ஆயிரக்கணக்கில் குவியும் வேலைவாய்ப்புகள்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
விஷயம் தெரிஞ்சா உடனே இந்த Samsung 5G போனை வாங்குவீங்க.! உட்ராதீங்க மக்களே.!
5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் தற்போது 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சில செல்போன் நிறுவனங்கள் அருமையான 5ஜி ஸ்மார்ட்போன்களை இப்போது அறிமுகம் செய்து வருகின்றன.

5ஜி போன்கள்
இன்னும் சில நிறுவனங்கள் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் ஒரு அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி
அதாவது சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ22 5ஜி (Samsung Galaxy A22 5G) ஸ்மார்ட்போனுக்கு தான் விலைகுறைப்பு அறிவித்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விலைகுறைப்பு மற்றும் இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விலைகுறைப்பு
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக
இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலை ரூ.17,999-விலையில் வாங்க முடியும்.
அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் முந்தைய விலை ரூ.21,999-ஆக இருந்தது.தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்.
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

தரமான பிராசஸர்
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 700 பிராசஸர் ஆதரவு உள்ளது. எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும்.
குறிப்பாக One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் இந்தபோனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அட்டகாசமான கேமரா வசதி
இந்த கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்.
இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
இந்த சாம்சங் போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் சாம்பல், பச்சை மற்றும் Violet நிறங்களில் இந்த சாம்சங் போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

கனெக்டிவிட்டி
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டிஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் எடை 203 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சாம்சங் நிறுவனம் இனி வரும் மாதங்களில் பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086