விரைவில்., வெகுவிரைவில் இந்தியாவுக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி- விலை, அம்சங்கள் இதோ!

|

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் இந்திய தர நிர்ணய பணியகம்(பிஐஎஸ்) வலைத்தளம் மற்றும் எச்டிஎம்எல்எஸ் பட்டியலில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என பிஐஎஸ் தளத்தில் தோன்றிய தகவல் தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தமாதம் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்தது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இதன் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்போடு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22

சாம்சங் கேலக்ஸி ஏ22

இதுகுறித்து மைஸ்மார்ட்பிரைஸ் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனானது SM-A225F என்ற மாதிரி எண்ணுடன் பட்டியல்களில் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கக்கூடும் என எச்டிஎம்எல்5 சோதனை பட்டியல் தள தகவல் தெரிவிக்கிறது, இந்த ஸ்மார்ட்போனானது 4ஜி மற்றும் 5ஜி மாறுபாடு உடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு வேரியண்ட்களும் 2021 ஆம் #ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ22 சாதனத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 750ஜி 4ஜிபி ரேம்

ஸ்னாப்டிராகன் 750ஜி 4ஜிபி ரேம்

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி சாதனத்தின் அம்சங்கள் குறித்து 91மொபைல்ஸ் வெளியிட்ட தகவல் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு வி11 மூலம் இயக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 750ஜி 4ஜிபி ரேம் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 2774பிபிஎல் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தின் ஒத்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1600 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதம், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் +2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

File Images

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A22 5G Gets BIS Certificate its Launching Soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X