Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி, கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ22 5ஜி, கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 ஸமார்ட்போன்கள் மாடல்கள்

விரைவில் இந்த ஸமார்ட்போன்கள் மாடல்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி, கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட பல்வேறுதகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700
  • ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
  • மெமரி: 128ஜிபி
  • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
  • செல்பீ கேமரா: 8எம்பி செல்பீ கேமரா
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • கைரேகை சென்சார் வசதி
  • 5 ஜி,வைஃபை
  • புளூடூத், ஜிபிஎஸ்
  • சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி விலை

    சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி விலை

    இந்திய மதிப்பில்...
    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,300-ஆக உள்ளது.
    4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,100-ஆக உள்ளது.
    6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வேரியண்டின் விலையை வெளியிடவில்லை அந்நிறுவனம். மேலும் Grey, Mint, Violet, White நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

    சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி அம்சங்கள்

    சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.4-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே
    • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    • சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80
    • ரேம்:4ஜிபி/6ஜிபி
    • மெமரி:64ஜிபி/128ஜிபி
    • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
    • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
    • செல்பீ கேமரா: 13எம்பி செல்பீ கேமரா
    • பேட்டரி: 5000எம்ஏஎச் பேட்டரி
    • 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • கைரேகை சென்சார் வசதி
    • எல்.டி.இ, வைஃபை,
    • புளூடூத், ஜி.பி.எஸ்
    • சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி விலை

      சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி விலை

      சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போனின் விலைப் பற்றி தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். மேலும் Black, Mint, Violet, White நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A22 5G, Galaxy A22 4G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X