வருகிற 17 ஆம் தேதி சாம்சங் ஏ21 எஸ் அறிமுகம்: வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

|

சாம்சங் ஏ 21 எஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பசம்ங்கள் குறித்து பார்க்கலாம்.

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம்

3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம்

இந்த ஸ்மார்டபோனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A21s will be launch in India on June 17

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X