புதிய சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் புதிய சாம்சங்
கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின முந்தைய விலை ரூ.18,499-ஆக இருந்தது,
தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு 17,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட
கேலக்ஸி ஏ21எஸ் மாடலுக்கு விலைகுறைக்கபடாமல் அதே விலை ரூ.16,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சில்லறை கடைகள், சாம்சங் Opera House, சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் கிடைக்கிறது. இந்த விலைக் குறைப்பை முதலில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது..

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1600 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதம், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் +2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications