Home
Mobile

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ21எஸ் ஸமார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அருமையான சிப்செட் வசதியுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்கள் வெளிவந்துள்ளது, அந்த தகவலைப் பார்ப்போம்.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் எனமொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்
என பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

இந்த ஸ்மார்டபோனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A21s leaked specs show 48MP triple rear cameras and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X