Home
Mobile

சாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போனிற்கு மீண்டும் விலை குறைப்பு! உடனே முந்துங்கள்!

சாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போன் மாடல் தற்பொழுது இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஆகிய இரண்டு வேரியண்ட் வகைகளுக்கு தற்பொழுது இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

விலைக் குறைப்பு

விலைக் குறைப்பு

முந்தைய விலைக் குறைப்புக்குப் பிறகு, சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் ஸ்மார்ட்போனின், 4 ஜிபி ரேம் விலை ரூ .15,999 என்று இருந்தது, இப்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டு சாம்சங் கேலக்ஸி A21s தற்பொழுது வெறும் ரூ .14,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின்

அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ .17,499 ஆக இருந்தது. தற்பொழுது புதிய விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்த வேரியண்டின் விலை வெறும் ரூ .16,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த புதிய விலை குறைப்பின் கீழ் இரண்டு வேரியண்ட் மாடல்களுக்கும் ரூ .1,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.

அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் போர்ட்டல்

இந்த விலைக் குறைப்பை முதலில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், விலைக் குறைப்பு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களையும் பிரதிபலிக்கிறது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளத்தை அணுகுங்கள்

நான்கு கேமரா அமைப்புடன் அட்டகாசமான ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போன் நல்ல சாய்ஸ். தற்பொழுது இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்ட விலை குறைப்புக்குப் பின்னர் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் கணிசமாகக் குறைந்துள்ளது. உடனே சாம்சங் கேலக்ஸி A21s ஸ்மார்ட்போன் வாங்க அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தை அணுகுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A21s gets a price cut in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X