சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மாரட்போன் ஆனது மீண்டும் விலைகுறைப்பு பெற்றுள்ளது. அதன்படி இந்த விலைகுறைப்பு பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டகேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.
ஆனால் 6 ஜிபி ரேம் +128 ஜிபி வேரியண்ட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை, இதுரூ.17,499-க்கு வாங்க கிடைக்கிறது. இப்போதுஇந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1600
பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதம், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4ஜிபி/6ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/ 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி பிரைமரி சென்சார்
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் +2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications