மூன்று ரியர் கேமராக்களுடன் ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஏ20எஸ்.!
சாம்சங் நிறுவனம் அன்மையில் புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமராக்கள் மற்றும் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ20எஸ்
இந்நிலையில் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபிமெமரி கொண்ட கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபிமெமரி கொண்ட கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1560 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார்
என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என
பல்வேறு வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது, 4ஜி வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications