4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட Samsung Galaxy A20s ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
புதிய விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ20எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்
குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களிலும் கிடைக்கும். மேலும் கருப்பு, பசுமை, நீலம் போன்ற நிறங்களில் விற்பனைக்கு வருகிறது இந்த சாதனம்.

அசத்தலான டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது, 4ஜி வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








