விரைவில்: 4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் அதன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவு, நாட்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ20எஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி + 8எம்பி + 5எம்பி என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த
ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications