சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தொடர்ந்து விலைகுறைப்பு அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி இன்று சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் சாதனங்களுக்கு ஆஃப்லைன் ஸ்டோர்களில்
விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு
கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 12,900-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட் பாஸ்ட்சார்ஜிங் உள்ளது, 4ஜி வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் இனிபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 * 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








