4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இக்கருவி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.
கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து தற்சமயம் கேலக்ஸி ஏ20 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை எக்ஸிநோஸ் 7884 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம், பின்பு
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இக்கருவி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

கேமரா:
கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:
கேலக்ஸி ஏ20 சாதனத்தில் 400எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது, பின்பு ரூ.14,900-என்ற ஆரம்ப விலையில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








