ரூ.5,290-விலையில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன்
கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் எஸ்-ஏ20ஜி மாடல் எண் உடன் எப்சிசி என்ற சான்றிதழ் பெற்று வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் விரைவில் கேலக்ஸி ஏ2 கோர் என்ற ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் எஸ்-ஏ20ஜி மாடல் எண் உடன் எப்சிசி என்ற சான்றிதழ் பெற்று வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் களமிறங்கும். இப்போது கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

5-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 540 x 960 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆக்டோ-கோர்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா
கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும், பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.

விலை
இந்த சாதனத்தில் 2600எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்,எஃப்.எம். ரேடியோ, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு அதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.5,290-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications