Home
Mobile

வேற மாறி வெயிட்டிங்.. 7.7 மி.மீ ஸ்லிம்மில் 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. ஆண்ட்ராய்டு 17 OS.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி (Samsung Galaxy A18 4G) களமிறங்கி இருக்கிறது. 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், சூப்பர் அமோலெட் டிஸ்பிளே போன்ற வழக்கமான பீச்சர்களை கொடுத்தாலும், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ், ஒன் யுஐ 9.0 போன்ற லேட்டஸ்ட் ஓஎஸ் வெர்ஷனை கொடுத்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் ஒன் யுஐ 9.0 (One UI 9.0) கிடைப்பதால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி ஸ்மார்ட்போனுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம். 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த கேலக்ஸி ஏ18 4ஜி கொடுக்கிறது.

வேற மாறி வெயிட்டிங்.. 7.7 மி.மீ ஸ்லிம்மில் 5000mAh பேட்டரி.. மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி அம்சங்கள் (Samsung Galaxy A18 4G Specifications): 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1610 (Octa Core Exynos 1610) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. இந்திய மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் வெளியாக வாய்ப்புள்ளது. 1.5 டிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. ஹைபிரிட் டூயல் நானோ (Hybrid Dual SIM) சிலாட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேம் + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா வருகிறது.

மெயின் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பட்ஜெட் மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி ஸ்மார்ட்போன் இருப்பதால், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பேட்டரியுடன் வெறும் 7.7 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. மேலும், 196 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. டைப்-சி ஆடியோ மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்களை கொடுத்து இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. இப்போது, விலை விவரங்களுக்கு வருவோம்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,884ஆக இருக்கிறது. இது பிரான்ஸ் நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையாகும். இந்தியாவில் மலிவாக வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல 5ஜி வெர்ஷனும் வெளியாக இருக்கிறது. பிளாக், கிரே மற்றும் லைட் ப்ளூ ஆகிய கலர்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A18 4G With 50MP Camera 5000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X