Home
Mobile

ஆர்டர் பறக்குமே.. பட்ஜெட் விலையில் புது Samsung போன் தயார்.. லேட்டஸ்ட் One UI 9 உடன்.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது கடந்த ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ17 (Samsung Galaxy A17) மாடலின் அப்கிரேடெட் வெர்ஷன் ஆன சாம்சங் கேலக்ஸி ஏ18 (Samsung Galaxy A18) மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால் இந்த கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இன்டர்னல் சர்வர்களில் (internal servers) காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன; இது - இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் இருக்கலாம் என்பதை குறிக்கிறது. கேலக்ஸி ஏ18 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பட்ஜெட்-பிரென்டலி மாடலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

புது Samsung போன் தயார்.. லேட்டஸ்ட் One UI 9 உடன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ18 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் சாம்சங்கின் ஐரோப்பிய டெஸ்ட் சர்வர்களில் சம்மிகுருவால் (SammyGuru) கண்டறியப்பட்டன. அதன் மூலம் இது எல்டிஇ-ஒன்லி வேரியண்ட் ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாம்சங் இந்த போனின் 5ஜி வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ்-ஐ (Android 17 OS) அடிப்படையாக கொண்டிருக்கக்கூடிய ஒன் யுஐ 9 (One UI 9) உடன் சோதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இது லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் உடன் ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ18 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி ஏ18 ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி ஏ17 மாடலை போலவே மலிவு விலை ஸ்மார்ட்போனாக அறிமுகமாக வாய்ப்புள்ளது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி ஏ17 ஸ்மார்ட்போனின் பேஸிக் மாடல் (6ஜிபி ரேம மற்றும் 128ஜிபி ஆப்ஷன்) கடந்த ஆகஸ்ட் 2025 இல் ரூ.18,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக இது ரூ.20,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.

கேலக்ஸி எஸ்27 சீரிஸில் ப்ரோ மாடல்: சாம்சங் (Samsung நிறுவனத்தின் பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஆனது - பொதுவாக பேஸ், பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்கள் என மூன்று ஸ்மார்ட்போன்களுடன் வருகிறது. ஆனால் ​​அடுத்த ஆண்டு வரவிருக்கும் கேலக்ஸி எஸ்27 பேமிலி ஆனது - புதிய கேலக்ஸி எஸ்27 ப்ரோ (Galaxy S27 Pro) வேரியன்ட் உட்பட மொத்தம் நான்கு மாடல்களுடன் அறிமுகமாகும் என்று ஒரு புதிய லீக் தெரிவிக்கிறது.

அதாவது வரவிருக்கும் கேலக்ஸி எஸ்26 சீரீஸில் ஸ்டாண்டர்ட் கேலக்ஸி எஸ்27 (Galaxy S27), கேலக்ஸி எஸ்27 பிளஸ் (Galaxy S27 Plus), கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா (Galaxy S27 Ultra) மற்றும் புதிய கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஆகியவைகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ்27 ப்ரோவை ஒரு பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது அதன் பல அம்சங்களை ஹை-எண்ட் கேலக்ஸி எஸ்27 அல்ட்ராவுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்த தகவல் தென்கொரிய ஆன்லைன் தளமான நேவரில் (Naver) இருந்து கிடைத்துள்ளது

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்27 ப்ரோ மடல் ஆனது 6.4-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஒரு காம்பாக்ட் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் ஒரு புதிய கேமரா சென்சார், ஸ்லிம் டிசைன் மற்றும் கேலக்ஸி எஸ்26 பேஸ் மாடலில் உள்ளதை விட பெரிய பேட்டரி ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்27 ப்ரோவை, கேலக்ஸி எஸ்27 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தக்கூடும். இந்த புதிய ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா மாடலுடன் பெரும்பாலான ஹார்ட்வேர்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு உயர் ரக மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ப்ரோ வேரியன்ட் எஸ் பென்-ஐ (S Pen) ஆதரிக்காது என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A18 4G Tipped to Launch Soon Key Specifications leaked Could be Budget Phone Around Rs 20000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X