Home
Mobile

பேக் டூ பேக் சிக்ஸ் அடிக்கும் Samsung.. 5000mAh பேட்டரி, 50MP கேமரா, IP54 உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ08 4ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியான வேகத்தில், கேலக்ஸி ஏ18 சீரீஸ் (Galaxy A18 Series) ஸ்மார்ட்போன்களின் சிப்செட் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி ஏ18 4ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ18 5ஜி ஆகிய 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்காக சாம்சங் தனது சொந்த எக்சினோஸ் (Exynos) சிப்களை பயன்படுத்துவதிலிருந்து விலகி செல்வதாக தெரிகிறது. ஏ16 4ஜி மற்றும் ஏ17 4ஜி மாடல்களைப் போலவே, இதன் 4ஜி மாடலும் மீடியாடெக் (MediaTek) ப்ராசஸரையே (processor) தொடர்ந்து பயன்படுத்தும். அதே சமயம், முந்தைய 5ஜி மாடல்களில் இருந்த எக்சினோஸ் 1330 (Exynos 1330) சிப்பிற்குப் பதிலாக, இதன் 5ஜி வெர்ஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) சிப்செட்டிற்கு மாறவுள்ளது.

Samsung.. 5000mAh பேட்டரி, 50MP கேமரா, IP54 உடன் புது 5ஜி போன்!

5ஜி மாடலில் எக்சினோஸ் இல் இருந்து குவால்காமிற்கு மாறுவதற்கான முக்கிய காரணம், செயல்திறனில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவதை விட, செலவை கட்டுப்படுத்துவதாகவே கூறப்படுகிறது. இருப்பினும், 5ஜி இணைப்பு மற்றும் செயல்திறனில் குவால்காம்-க்கு உள்ள வலுவான நற்பெயர் காரணமாக, எக்சினோஸ்-ஐ கொண்டிருந்த முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில், வாங்குபவர்களுக்கு இந்த போன் ஒரு சிறந்த மேம்படுத்தப்பட்ட டிவைஸ் ஆக தோன்றலாம்.

இதற்கான உற்பத்தி திட்டங்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றன. ஏ18 4ஜி மாடலின் பெருமளவிலான உற்பத்தி 2026 ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் மாதம் சுமார் 100,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு, பின்னர் உற்பத்தி அளவு கணிசமாக அதிகரிக்கப்படும். இதன் 5ஜி வெர்ஷன் சில மாதங்களுக்கு பிறகு உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், ஏ-சீரீஸ் போன்களுக்கே உரித்தான சிறப்பம்சங்களை ஏ18 மாடலும் வழங்கும் என்று தெரிகிறது. ஏ17 மாடலில் உள்ளதை போலவே 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான Super AMOLED டிஸ்பிளே, 50எம்பி ப்ரைமரி கேமரா, 25W சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி மற்றும் IP54 ரேட்டிங் ஆகியவைகளை எதிர்பார்க்கலாம்

சாம்சங் கேலக்ஸி ஏ08 4ஜி: கேலக்ஸி ஏ08 4ஜி சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மலிவு விலை கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு ஒரு படி நெருக்கமாக வந்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ08 4ஜி (Samsung Galaxy A08 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இது SM-A085F/DS என்ற மாடல் நம்பருடன் வைஃபை அலையன்ஸ் (Wi-Fi Alliance) சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது - இந்த ஸ்மார்ட்போன் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை நெருங்கி கொண்டிருப்பதை குறிக்கிறது.

எப்போது அறிமுகம்? மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே - சாம்சங்கின் என்ட்ரி லெவல் சீரீஸ் ஆன கேலக்ஸி ஏ-சீரீஸின் கீழ் - கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி ஏ07 4ஜி (Galaxy A07 4G) மாடலுக்கு அடுத்ததாக கேலக்ஸி ஏ08 4ஜி வரவுள்ளது. கேலக்ஸி ஏ07 மாடலானது ஆகஸ்ட் 2025 இல் அறிமுகமானதை கருத்தில் கொண்டால், சாம்சங் தனது வருடாந்திர வெளியீட்டு சுழற்சியை பின்பற்றும் பட்சத்தில், கேலக்ஸி ஏ08 4ஜி ஆனது ஆகஸ்ட் 2026 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

என்ன விலைக்கு வரும்? இப்போதைக்கு கேலக்ஸி ஏ08 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறித்து சாம்சங் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனாலும் முந்தைய மாடல், வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு நல்ல குறிப்பை வழங்குகிறது. கேலக்ஸி ஏ07 4ஜி ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 64GB ஆப்ஷன் இந்தியாவில் ரூ.8,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


Article Corrections

தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளாள் IP64 ரேட்டிங் என்கிற விவரம் IP54 என மாற்றப்பட்டுள்ளது.
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A18 4G and Samsung Galaxy A18 5G Chipsets leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X