சைலன்ட் ஆக இன்னொரு புது Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், OIS கேமரா, 6 Android அப்டேட்!
சாம்சங் நிறுவனம் மிகவும் அமைதியான முறையில் அதன் சாம்சங் இந்தியா சப்போர்ட் பேஜில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை சேர்த்துள்ளது. அறியாதோர்களுக்கு சப்போர்ட் பேஜில் சேர்க்கப்படும் ஸ்மார்ட்போன் ஆனது உடனடியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அர்த்தம்.
அப்படியாக இந்தியாவில் அடுத்ததாக அறிமுகம் செய்யப்படவுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் ஆகும், இந்த ஸ்மார்ட்போனின் ஆதரவு பக்கம் சாம்சங் இந்தியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக து எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மற்றொரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) ஸ்மார்ட்போனாகும். இவ்விரு சாம்சங் ஸ்மார்ட்போன்களிலும் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:
சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக வெளியான லீக்ஸ் வழியாக, சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4860mAh திறன் மதிப்பிடப்பட்ட பேட்டரி உடன் வரலாம்; சாம்சங் இதை 5,000mAh பேட்டரி என்று விளம்பரப்படுத்தலாம்.
மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இது தான் கேலக்ஸி ஏ1எக்ஸ் (Galaxy A1X) சீரீஸில் - ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் எனேபிள்டு கேமராவுடன் அறிமுகமாகும் முதல் மாடல் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்போனில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் மற்றும் இது ஆண்ட்ராய்டு 15 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் இயங்கக்கூடும். சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும், ஆறு ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி பேட்ச்களையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ07 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை. இது 4ஜிபி அளவிலான ரேம், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட், ஆக்டா-கோர் சிப்சேட் ஆகிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல்கள் மட்டுமே உள்ளது.
சாம்சங் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை இந்நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது Coral Red, Luxe Violet மற்றும் Onxy Black ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
விலையை பொறுத்தவரை 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,499 க்கும், 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 29 முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் சாம்சங் இந்தியா (Samsung India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் (1080 x 2340 பிக்சல்ஸ்) 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-U டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ ப்ரொடெக்ஷன்
- ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1380 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா
- 13எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, கீழே போர்ட்டபிள் ஸ்பீக்கர்
- 5ஜி SA / NSA, 4ஜி VoLTE
- வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5.3
-ஜிபிஎஸ் + GLONASS
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
-5000mAh பேட்டரி
- அளவீட்டில் 164.4 x 77.9 x 7.7மிமீ; எடையில் 197கிராம்.


Click it and Unblock the Notifications








